மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்ததால், 1.5 ஆண்டுக்கு பின்னர், நந்தீஸ்வரரின் தலை வெளியே தெரியும் நிகழ்வு கண்கொள்ளாக் காட்சியாகி உள்ளது .
மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடியாகும். அணையின் பண்ணவாடி நீர்பரப்பு பகுதியில் அருள்மிகு சுவாமி ஜலகண்டேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது உள்ளது. அணையின் நீர்மட்டம், 69 அடிக்கு மேலே உயரும்போது கோவில் நந்தியின் சிலையானது மூழ்கி விடும்.
கடந்த ஆண்டு பிப்ரவரிமாத இறுதியில் அணை நீர்மட்டம், 69 அடிக்கு கீழ் சரிந்ததால், நந்தி சிலை வெளியே தெரிந்தது. அதே போல் மீண்டும் ஆகஸ்ட் மாதத்தில் நீர்மட்டம் உயர்ந்ததால், சிலை மூழ்கியது.
இந்நிலையில் டெல்டா பாசனத்துக்கு தற்போது நீர் திறந்ததால் கடந்த மாதம் 12ந்தேதி 101 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், நேற்று 67.54 அடியாக சரிந்த நிலையில் பண்ணவாடி நீர்பரப்பில் மூழ்கி இருந்த நந்தி சிலையின் தலையானது நேற்று முழுமையாக வெளியே தெரிந்தது. நேற்று முன்தினம் வினாடிக்கு, 4,352 கனஅடியாக இருந்த, அணையின் நீர்வரத்து,5,081 கனஅடியாக அதிகரித்ததுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : டிராகன் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து மார்க்கெட் எங்கேயோ சென்று விட்டது என்று சொல்லலாம்.அந்த…
டெல்லி : கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா வெற்றியடைந்து கோப்பையை கைப்பற்றிய நிலையில், அந்த சந்தோசத்தோடு டி20…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…
சென்னை : தமிழகத்தில் மும்மொழி கொள்கை விவரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் பலரும்…
சென்னை : குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நேற்று நீலகிரி, ஈரோடு,…