நாசா செல்லும் மாணவிக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி – முதல்வர் அறிவிப்பு.!
- நாசா செல்லும் மாணவிக்கு தமிழக முதல்வர் ஊக்குவிக்கும் விதமாக ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
நாசா சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்லும் நாமக்கல்லை சேர்ந்த அரசு பள்ளியில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவி அபிநயாவிற்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த நிலையில் வருங்கால இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும் விதமாக அபிநயாவிற்கு 2 லட்சம் ரூபாய் நிதிஉதவி வழங்கப்படுத்தவாகவும் தெரிவித்துள்ளார். விண்வெளித்துறையில் சாதனை படைத்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்திட வேண்டும் என கூறியுள்ளார். பின்னர் மாணவி அபிநயாவிற்கு தமிழக அரசின் சார்பிலும், தனிப்பட்ட முறையிலும் வாழ்த்துக்கள் எனவும் முதல்வர் தெரிவித்தார்.
இதனிடையே நாமக்கல் மாவட்டம் கருப்பட்டிபாளையத்தை சேர்ந்த மாணவி அபிநயா, கோஃபார் குரு என்ற ஆன்லைன் தேர்வின் மூலம் நாசா விண்வெளி மையத்திற்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பண வசதி இல்லாமல் தவித்து வந்தார். இது குறித்து செய்தி வெளியான நிலையில் பரப்புரைக்கு நாமக்கல் சென்ற மின்சாரத்துறை அமைச்சர் தங்க மணி, மாணவியின் குடும்பத்தினரை அழைத்து 2 லட்சம் ரூபாயை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.