#BREAKING: சுருக்குமடி வலை- தமிழக அரசு முடிவெடுக்க உத்தரவு..!
தமிழகத்தில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பது தொடர்பாக உரிய முடிவு எடுக்க தமிழ்நாடு அரசிற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
சுருக்குமடி வலைகளை பயன்படுத்த மீனவர்களுக்கு உரிமை உள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருப்பதால் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என மனுதாரர் தெரிவித்தார். மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து உரிய முடிவு எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சுருக்குமடி வலையைக் கொண்டு மீன்பிடி தொழில் செய்வது தொடர்பாக உரிய முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.