பொய் கூறுவதையே கலாச்சாரமாக கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியால் மக்களுக்கு எப்படி சேவை செய்ய முடியும்?
சமீபத்தில் புதுச்சேரி சென்ற காங்கிரஸ் கட்சியின் எம்.பி.ராகுல் காந்தி, சோலை நகர் பகுதியில் உள்ள கடலோர மக்களோடு உரையாற்றினார். அப்போது பேசிய மூதாட்டி ஒருவர், மழை, புயலினால் பாதிக்கப்பட்ட போது, புதுச்சேரி முதல்வரான நாராயணசாமி சந்தித்து, நிவாரணம் வழங்கவில்லை என குற்றம்சாட்டினார்.
ஆனால், புதுச்சேரி முதல்வர், அதை ராகுல் காந்தியிடம் மொழி பெயர்த்து கூறும் போது, மழை, புயலினால் பாதிக்கப்பட்ட போது சந்தித்து நிவாரணம் வழங்கியதாக ராகுல் காந்தியிடம் மாற்றி கூறினார். நாராயணசாமியின் இந்த செயல் கடும் விமர்சனத்திற்குள்ளானது.
இந்நிலையில், பிரதமர் மோடி, கோவை மொடிசியா அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு நாராயணசாமியின் இந்த நிகழ்வை சுட்டிக்காட்டி பேசிய பிரதமர் மோடி, சொந்த கட்சி தலைவரிடம் நாராயணசாமி பொய் பேசியுள்ளார். தன் மக்களை ஏமாற்றியுள்ளார். பொய் கூறுவதையே கலாச்சாரமாக கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியால் மக்களுக்கு எப்படி சேவை செய்ய முடியும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…