நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியில்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றிபெற்றுள்ளது.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினகரனின் அமமுக கட்சி ஒரு இடங்களில் கூட வெற்றிபெறவில்லை.
இதன் பின் தினகரனின் அமமுக பல்வேறு சறுக்கல்களை சந்தித்து வருகிறது. அதற்கு காரணம் அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அமமுகவை விட்டு விட்டு செல்கின்றனர்.மேலும் வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிடவிடவில்லை என்று தினகரன் தெரிவித்தார்.நிலையான சின்னம் கிடைத்த பின்னரே தேர்தல்களில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இதனைத்தொடர்ந்து ,நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியில்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கட்சிக்கு நிரந்தர சின்னம் கிடைக்கும் வரை இடைத்தேர்தலில் போட்டியில்லை என்றும் தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7)…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவின் ஐபிஎல் பார்ம் இந்த ஆண்டு மிகவும் கவலைக்கிடமாக…
சென்னை : கடந்த மார்ச் 6 முதல் 8 வரை, மத்திய அமலாக்கத்துறை (ED) டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் திடீர்…