நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் நிலைப்பாடு குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் கன்னியாகுமரியில் போட்டியிட்ட திமுக கூட்டணி கட்சியின் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் அபார வெற்றிபெற்றார்.இவரை எதிர்த்து போட்டியிட்ட மத்திய அமைச்சரும், பாஜக வேட்பாளருமான பொன் .ராதா கிருஷ்ணன் தோல்வி அடைந்தார்.
பின்னர் நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ பதவியிலிருந்து காங்கிரஸ் கட்சியின் ஹெச்.வசந்தகுமார் விலகினார்.சபாநாயகர் தனபாலிடம் தனது விலகல் கடிதத்தை அளித்தார்.இதனையடுத்து நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவிப்பு வெளியிட்டார்.
இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் நிலைப்பாடு குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும்.மேலும் காங்கிரஸ் -திமுக இடையே இது குறித்து பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை என்று தெரிவித்தார்.
சென்னை : சண்டிகர் மாநிலத்தில் இளம் ஐபிஎஸ் அதிகாரிகள் கலந்து கொண்ட 5வது ஐபிஎஸ் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில்…
சென்னை : ஃபெஞ்சல் புயலின் தாக்கம் தற்போது தான் வடதமிழக மாவட்டங்களில் சற்று மெல்ல மெல்ல குறைய தொடங்கியுள்ளது. இன்னும்…
ஐதராபாத்: தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களான நாக சைதன்யா - நடிகை சோபிதாவின் திருமணம் இன்று பிரமாண்டமாக நடந்து முடிந்தது.…
புதுச்சேரி: ஃபெஞ்சல் புயலால் பெருமழை பாதிப்பில் சிக்கிய புதுச்சேரியில் அதிகம் பாதிக்கப்பட்ட கிருஷ்ணா நகர், வெங்கட்டா நகர் உள்ளிட்ட இடங்களில்…
கடலூர்: பெஞ்சல் புயல் கனமழை காரணமாக வட தமிழக மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, விழுப்புரம் மாவட்டத்தில் இன்னும் வெள்ள…
சென்னை: வடசென்னை உயர்கல்வித்துறை சார்பில் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில், ரூ.1,383 கோடி மதிப்பீட்டில் 79 புதிய திட்டப் பணிகளை…