நாங்குநேரி கொடூரம்..! ஆகஸ்ட் 21 அன்று விசிக சார்பில் ஆர்ப்பாட்டம்..!

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் பள்ளி மாணவன் சின்னத்துரை மற்றும் அவனது தங்கை இருவரும் சக மாணவர்களால் மிகக் கொடூரமான முறையில் வெட்டப்பட்டனர்.
இந்த கொலைவெறி தாக்குதலை கண்டித்து ஆகஸ்ட் 21ம் தேதி திருநெல்வேலியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
20ம் தேதி நடைபெறுவதாக இருந்த ஆர்ப்பாட்டம் 21ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதில் சனநாயக சக்திகள் அனைவரும் பெருந்திரளாக பங்கேற்கவும்! என விசிக தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.