நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு நாளை மறுநாள் வேட்புமனு தாக்கல்..!
இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு இடைத் தேர்தலை அறிவித்தார்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும். நாளை மறுநாள் வேட்புமனு தாக்கலும், வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதி செப்டம்பர் 30-ம் தேதியும் , வேட்புமனு பரிசீலனை அக்டோபர் 01-ம் தேதியும், மனுக்களைத் திரும்பப் பெற அக்டோபர் 03-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 24-ம் தேதியும் நடைபெறும் என அறிவித்தார்.