நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் ஆகியோர் சிறையில் இருக்கும் நிலையில், நாளைய தினம் நடைபெற இருந்த நந்தினியின் திருமணம் வேறு ஒரு நாள் நடைபெற இருக்கிறது. இந்த தகவலை நந்தினியின் கணவராக இருக்கும் குணா தெரிவித்துள்ளார்.
2004 ம் ஆண்டு அரசு டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டார்.அப்போது, காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தாகவும், அவர்களை தாக்கியதாகவும் நந்தினி மீது வழக்கு தொடரப்பட்டது. சிவகங்கை மாவட்டம் நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில் கடந்த 27 ம் தேதி நீதிபதி சாமுண்டீஸ்வரி முன்னாள் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை சார்பில் சாட்சிகள் ஆதாரம் என்று கூறி நந்தினி மற்றும் ஆனந்தன் இருவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டனர். இவர்களுக்கு ஜாமீன் வழங்கவும் மறுத்து விட்டனர்.
நீண்ட நாட்களாக மதுவுக்கு எதிராக போராடும் நந்தினி அவர்களுக்கு நாளைய தினம் ஜூலை 5ம் தேதி திருமணம் நடக்க இருந்தது. அதற்கான ஏற்பாடுகள் ஒரு புறம் நடக்க, சிறையில் இருக்கும் இருவரையும் மீட்டு வர நந்தினியின் சகோதிரி மற்றும் கணவராக வர இருக்கும் குணா ஆகியோர் முயற்சி செய்தனர். ஆனால் , ஜூலை 9ம் தேதி வரை ஜாமின் கிடைக்க வாய்ப்பில்லை என்ற நிலைமை உருவாகியது . இந்த நிலையில், நந்தினி சிறையில் இருந்து வெளி வந்த பின்னரே திருமணம் நடக்கும் என்று மணமகன் குணா கூறியுள்ளார்.
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…