“நம்ம ஸ்கூல் பவுண்டேசன்” – ஒருமாத ஊதியத்தை நன்கொடையாக வழங்கிய அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்..!
நம்ம ஸ்கூல் பவுண்டேசன்” திட்டத்திற்கு மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒருமாத ஊதியத்தொகையை வழங்கியுள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த வருடம் டிச.19-ஆம் தேதி முன்னாள் மாணவர்கள் பங்களிப்புடன் அரசு பள்ளிகளை மேம்படுத்தும் நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டத்தை தொடங்கி வைத்தார். முன்னாள் மாணவர்கள் அரசு பள்ளிகளை தத்தெடுத்து அந்த பள்ளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க இத்திட்டத்தை பள்ளி கல்வித்துறை தொடங்கியுள்ளது.
அந்த வகையில், “நம்ம ஸ்கூல் பவுண்டேசன்” (நம்ம ஊர் பள்ளி) திட்டத்திற்கு மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒருமாத ஊதியத்தொகையான ஒரு கோடியே 29 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் மாண்புமிகு அரசு தலைமைக் கொறடா திரு. கோவி. செழியன் ஆகியோர் வழங்கினர்.