தினகரனுக்கு ஆப்பு மேல் ஆப்பு..! ஒரே பெயரில், குக்கரில் சுயேட்சை வேட்பாளரை களமிறக்கிய சூத்திரதாரிகள்!
- இந்தியாவின் மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது தமிழகத்தில்
- ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது
அதிமுகவில் இருந்து பிரிந்து வந்து அமமுக என்ற கட்சியைத் தொடங்கிய தினகரன் தற்போது ஓரளவிற்கு தமிழகத்தில் பெயர் தெரிந்த முகமாக உள்ளார். இந்நிலையில் ஆர் கே நகர் தொகுதியில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற அவர் மீண்டும் அந்தச் சின்னம் வேண்டுமென தேர்தல் ஆணையத்தை அணுகினார்.
ஆனால், அந்த சின்னத்தை ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையமும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் பரிசு போட்டி சின்னத்தை தனது அனைத்து வேட்பாளர்களுக்கும் சுயேச்சையாக பெற்றுக்கொடுத்தார். இந்நிலையில் டிடிவி தினகரன் வாக்குகலை சிதறடிப்பதற்காக பல தொகுதிகளில் தினகரன் கட்சியின் வேட்பாளரின் பெயர் உடன் அவரது பழைய சின்னமான குக்கர் சின்னத்துடன் வேட்பாளர்களை களம் இறங்கியுள்ளனர் மாற்றுக்கட்சி சூத்திரதாரிகள்.
இந்த தினகரனின் வேட்பாளர்களின் கட்சியின் ஓட்டுக்கள் சிதறும் என்று தெரிகிறது. மேலும், பல குழப்பங்கள் எழுந்து அவர் பல தொகுதியில் தோல்வி அடையலாம் எனவும் கூறப்படுகிறது.
திருவாரூர் தொகுதி
சுயேட்சை வேட்பாளர் – காமராஜ்(குக்கர் சின்னம்)
சாத்தூர் தொகுதி
அமமுக வேட்பாளர் – எஸ்.சி.சுப்பிரமணியம்(பரிசுப் பெட்டி சின்னம்)
சுயேட்சை வேட்பாளர் – சுப்பிரமணியம்(குக்கர் சின்னம்)
பாப்பிரெட்டிபட்டி தொகுதி
அமமுக வேட்பாளர் – டிகே ராஜேந்திரன்(பரிசுப் பெட்டி சின்னம்)
சுயேட்சை வேட்பாளர் – ராஜேந்திரன்(குக்கர் சின்னம்)
அரூர் தொகுதி
அமமுக வேட்பாளர் – முருகன்(பரிசுப் பெட்டி சின்னம்)
சுயேட்சை வேட்பாளர் – முருகன்(குக்கர் சின்னம்)