தமிழக அரசு துறைகளின் பெயர் மாற்றம்…! அரசாணை வெளியீடு…!
- தமிழக அரசு துறைகளின் பெயர் மாற்றம் செய்தது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
- அரசாணையை தலைமை செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ளார்.
தமிழக அரசு துறைகளின் பெயர் மாற்றம் செய்தது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்ததையடுத்து, சில அரசு துறைகளின் பெயரை மாற்றி அறிவிப்பு வெளியிட்டது. தற்போது அந்த பெயர்களை தமிழக அரசு விதிகளில் மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டு உள்ளது.
- பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை என்பது மனிதவள மேலாண்மை துறை என்று மாற்றப்படுகிறது.
- வேளாண்மைத்துறை என்பது வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை என்று மாற்றப்படுகிறது.
- கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை என்பது கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை என்று மாற்றப்படுகிறது.
- சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை என்பது சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை என்று மாற்றப்படுகிறது.
- தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை என்பது தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை என்று மாற்றப்படுகிறது.
- சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை என்பது சமூகநலன் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத்துறை என்று மாற்றப்படுகிறது.
மேற்கண்ட அரசாணையை தலைமை செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ளார்.