பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் – தமிழக அரசு உத்தரவு.!

Default Image

தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான 1948ம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் விதிகளிலும், 1959ம் ஆண்டு உணவு நிறுவனங்கள் விதிகள் முறையே 1983 மற்றும் 1984ம் ஆண்டுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பெயர்ப் பலகைகளில் தமிழ் எழுத்துக்கள் முதன்மையாகவும், ஆங்கிலம் 2வது இடத்திலும், மற்ற மொழிகள் 3வது இடத்திலும் இருக்கவேண்டும் என்றும், இந்த சட்ட விதிகள் பின்பற்றப்படாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்