புத்தகத்தில் படித்து பயின்றதை நடைமுறைக்கு ஏற்றவாறு புதிய கண்டுபிடிப்புகளை மாற்றுவதை கல்வியின் சிறப்பாக அமைகிறது. பின்னர் தற்போது உள்ள இளைஞர்கள் நடைமுறைக்கு ஏற்றவாறு புது புது கண்டுபிடிப்புகளை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான அருண் பிரபு என்பவர் ஆட்டோ ஒன்றை நடமாடும் வீடாக வடிவமைத்துள்ளார். அவர் கட்டடக் கலையில் பட்டம் பெற்றவர், அதனால் நவீன வசதிகளுடன் கூடிய ஆட்டோவை வீடாக மாற்றியிருக்கிறார்.
இந்நிலையில், குறைந்த இடத்தில் தேவைப்படும் வசதிகளுடன் இருக்கும் இந்த ஆட்டோ வீடு ரூ.1,00,000 மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டோ வீட்டில் சமையல் செய்யும் இடம், படுக்கை அறை, கழிப்பிடம், துணிகளை காயவைக்கும் இடம் உள்ளிட்டவை இடம்பெறுகிறது. மேலும், ஆட்டோவின் மேல் பகுதியில் மொட்டை மாடியில் உள்ள வசதிகளும் இருப்பது கூடுதல் சிறப்பாக அமைகிறது. பின்னர் வீட்டிற்கு தேவையான மின்சாரம் முழுவதும் சூரிய மின் சக்தி (solar system) மூலமாக தயாரிக்கப்படுகிறது.
மேலும், வீடு இல்லாத ஏழை மக்களுக்கும், வெவ்வேறு இடங்களுக்கும் சென்று தொழில் செய்யும் சிறு வியாபாரிகளுக்கு இந்த வீடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பொறியியல் பட்டதாரி அருண் பிரபு கூறிகிறார்.
தற்போது பொறியியல் படிப்பிற்கு வேலை வாய்ப்பு குறைந்து வருகிறது என கூறப்படும் வேலையில் ஆர்வத்துடன் கல்வி கற்றால் சாதிக்க முடியும் என்பதற்கு சான்றாக இந்த ஆட்டோ வீடு இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…
மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…