ஊரடங்கு உத்தரவால் 500 கி.மீ நடைபயணம் மேற்கொண்ட நாமக்கல் இளைஞர்! செல்லும் வழியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Default Image

இந்தியா முழுவதும் கொரோனா  பரவுவதை கட்டுப்படுத்த, இந்திய அரசு  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  இதானால், நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவால், வெளி மாநிலங்களில் இருந்து வந்து வேலை செய்த தொழிலாளர்கள் மீண்டும் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. 

 இந்நிலையில், தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் லோகேஷ் பாலசுப்ரமணி (21). இவர் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் வேலை செய்துவந்துள்ளார். இதனையடுத்து லோகேஷ், நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் வேலை, தங்குமிடம், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளில் பிரச்சனை ஏற்பட்டதையடுத்து சொந்த ஊரான நாமக்கலுக்கு வர முடிவு செய்துள்ளார்.

போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் நாக்பூரில் இருந்து நாமக்கலுக்கு சுமார் 500 கிலோமீட்டர் தூரம் சாலைவழியாக நடந்தே வர லோகேஷ் முடிவு செய்துள்ளார். இதையடுத்து, வெளிமாநிலங்களில் வேலைசெய்துவந்த தமிழகத்தை சேர்ந்த 26 பேருடன் இணைந்து லோகேஷ் பாலசுப்ரமணியும் சாலை வழியாக நடந்தே வந்துள்ளார்.
 
கடுமையான வெயிலில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபயணம் மேற்கொண்ட லோகேஷ் தனது 500 கிலோமீட்டர் பயணத்தின் வழியில் நேற்று முன்தினம் இரவு, புதன்கிழமையன்று தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் வந்தடைந்தார். மூன்று நாட்கள் தொடர்ந்து பயணம் செய்த அனைவரும் அங்கு உள்ள சமுதாய நலக்கூடத்தில் இரவு தங்கியுள்ளனர்.
 
இந்நிலையில், அங்கு இருந்த சக பயணிகளுடன் இருக்கையில் அமர்ந்த லோகேஷ், திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து, உடனடியாக மருத்துவரை அழைத்து லோகேஷை பரிசோதனை செய்தனர். அவரை பரிசோதித்த  இறந்து விட்டதாக கூறியுள்ளார். இந்த சம்பவம்,  அவருடன் வந்த சக பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்