பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி ஊழியருடன் ஆசிரியர் தகாத உறவு! தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் மீது வழக்குப்பதிவு!
சில தினங்களுக்கு முன்னர் பள்ளி வளாக கழிவறையில் அப்பள்ளி ஆசிரியரும், அங்கன்வாடி பொறுப்பாளரும் தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளதை மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் கூறியுள்ள்ளனர். பின்னர் ஊர்மக்கள் ஒன்றுகூடி சரவணனை வெளுத்து வாங்கினர். இவர் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.
இச்சம்பவம் நடைபெற்ற பள்ளி, நாமக்கல் மாவட்டம், புதன் சந்தையை அடுத்த எஸ்.உடுப்பியில் செயல்பட்டு வரும் பள்ளியாகும். இதே பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் சரவணனும், அதே பள்ளியில் அங்கன்வாடி பொறுப்பாளர் ஜெயந்திக்கும் பழக்கம் ஏற்பட்டு அவர்கள் பள்ளி கழிவறையிலேயே தகாத உறவில் ஈடுபட்டு இருந்து வந்துள்ளனர்.
இதனை பார்த்த மாணவர்கள் அவர்கள் பெற்றோரிடம் கூறி அவர்களும் , ஊர்மக்களும் ஒன்று கூடி ஆசிரியரை வெளுத்து வாங்கினர். இதனை தொடர்ந்து ஆசிரியரை தாக்கியதாக கூறி பட்டியலின வன்கொடுமை சட்டத்தின் கீழ், கிராமத்தார் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும், பள்ளி வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சரவணன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.