டெல்லியில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் அக்கட்சியில் இணைந்தார்.
கடந்த 25-ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் நீக்கம் செய்யப்படுகிறார் என்று புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியம் அறிவித்திருந்தார். கட்சிக்கு துரோகம் இழைத்ததால், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
கட்சியிலிருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து நமச்சிவாயம், தனது வில்லியனுர் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை புதுச்சேரி சபாநாயகரிடம் அளித்திருந்தார். நமச்சிவாயத்திற்கு ஆதரவாக ஊசுடு தொகுதி எம்எல்ஏவும் தீப்பாஞ்சானும் ராஜினாமா செய்திருந்தார்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் முன்னாள் எம்எல்ஏ தீப்பாஞ்சானும் பாஜகவில் இணைந்தனர். டெல்லியில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் முன்னிலையில் இருவரும் கட்சியில் இணைந்தனர். நமச்சிவாயம் சில நாட்களுக்கு முன்பு தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : காமெடி கலந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வந்த நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், சமீபத்தில்…
அமெரிக்கா : மாநிலத்திற்கு என்ன தான் ஆச்சு என்கிற வகையில், இந்த ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொழுந்துவிட்டு தீ ஒரு…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த ஜனவரி 10ஆம் தேதியன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு முக்கிய சட்ட…
சென்னை : நேற்று (ஜனவரி 22 ) மாலை 5 மணியளவில் மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் மும்பை நோக்கி…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் புதிய அருங்காட்சியகங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.…
மும்பை : மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் நேற்று (ஜனவரி 22 ) மாலை 5 மணியளவில் மும்பை நோக்கி…