போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த நாம் தமிழர் கட்சியினர் கைது..!
சேலத்தில் செவிலியர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா பெருந்தொற்று தடுப்புப் பணிகளுக்காக தொகுப்பூதிய அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களை, தமிழ்நாடு அரசு பணிநீக்கம் செய்து உத்தரவிட்டதுள்ளது.
இதற்கு எதிராக, சேலம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், சேலத்தில் செவிலியர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.