#BREAKING : நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்

Default Image

நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்.

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன்,உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மகள் திருமண ஏற்பாடுகளுக்காக 6 மாத பரோல் கோரிய வழக்கில் நளினியை ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.வேலூர் சிறையில் உள்ள நளினியை இன்று ( 5ஆம் தேதி) நேரில் ஆஜர்படுத்த அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதன்படி   நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகினார்.இதன் பின்னர் 6 மாதங்கள் பரோல் வழங்க சட்டத்தில் இடமில்லை  என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இதனை அடுத்து சென்னை உயர்நீதிமன்றம் நளினிக்கு ஒரு மாத பரோலில் விடுவிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
rain pradeep john
africa cyclone
anil kumble ashwin
l murugan
chennai rains
Mumbai Boat Accident