நளினி இன்று விடுதலையாக வாய்ப்பு இல்லை!
நளினி விடுதலை தொடர்பான உத்தரவு நகல் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என சிறைத்துறை தகவல்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ரவிசந்திரன், ராபர்ட் பயாஸ் ஆகிய 6 பேர் நன்னடத்தை, சிறையில் கல்வி கற்றது, பரோல் விதிமுறை, ஆளுநரின் தாமதம் ஆகியவற்றின் அடிப்படையில் விடுதலை செய்ய நேற்று உச்சநீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியிருந்தது.
இந்த நிலையில், நளினி விடுதலை தொடர்பான உத்தரவு நகல் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் பரோலில் உள்ள நளினி இன்று விடுதலையாக வாய்ப்பு இல்லை என்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் திங்கட்கிழமை விடுதலை செய்ய வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்படுகிறது.
உச்சநீதிமன்றம் நேற்று விடுதலை செய்து உத்தரவிட்டிருந்த நிலையில் சிறை எஸ்.பி தகவல் தெரிவித்தாக கூறப்படுகிறது. மேலும், நீதிமன்ற உத்தரவு பெற்றவுடன் பரோலில் உள்ள நளினி, வேலூர் சிறையில் உள்ள முருகன் மற்றும் சாந்தன் விடுதலை செய்யப்படுவார்கள் என சிறைத்துறை டிஐஜி செந்தாமரைக்கண்ணன் கூறியுள்ளார். விடுதலை செய்வதற்கு ஞாயிற்றுக்கிழமை பிரச்சனை இல்லை எனவும் தெரிவித்தார்.