நளினிக்கு ஜாமீன் வழங்க முடியாது – சென்னை உயர் நீதிமன்றம்!
ஜாமீன் கோரி நளினி உச்சநீதிமன்றத்தை தான் அணுக முடியும் என சென்னை உயர்நீதிமன்றம் தகவல்.
பேரறிவாளன் ஜாமீன்:
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, பரோலில் வெளியே இருந்த நிலையில், தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து சமீபத்தில் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஜாமீன் கோரும் நளினி:
இந்த நிலையில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மற்றொரு தண்டனை கைதியாக உள்ள நளினிக்கு எந்த சட்டத்தின் அடிப்படையில் ஜாமீன் வழங்க முடியும்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. உயர்நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்க முடியாது, ஜாமீன் கோரி நளினி உச்சநீதிமன்றத்தை தான் அணுக முடியும் என்றும் தெரிவித்துள்ளது.
நளினி வழக்கு ஒத்திவைப்பு:
பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஜாமீன் கோரி நளினி மனு தாக்கல் செய்திருந்தார். இதுபோன்று பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நகலை தமிழக அரசு தாக்கல் செய்தது. முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரும் நளினியின் வழக்கை மார்ச் 24க்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம்.