நளினி மற்றும் முருகன் உடல்நிலை மோசம்! குளுகோஸ் ஏற்றம்!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி மற்றும் அவரது கணவரான முருகன் இருவரும் கைது செய்யப்பட்டு, பல வருடங்களாக சிறைச்சாலையில் இருந்து வருகின்றனர். இதற்கிடையில் சிறைச்சாலையில் செய்த சோதனையில், முருகனிடம் இருந்து கையடக்க தொலைபேசி மற்றும் ஹெட்செட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த காவல்துறையினர், முருகனுக்கு மூன்று மாதங்களுக்கு, சிறையில் வழங்கப்பட்டு வந்த சலுகைகள் ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து, முருகன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அது மட்டுமல்லாமல், நளினி தனது கணவரான முருகனை சிறையில் தனி அறையில் அடைத்து கொடுமைப்படுத்துவதாக கூறி, தொடர்ந்து 10 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் இவர்கள் இருவரையும் மருத்துவர்கள் கண்காணித்து, இருவருக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.