நளினி மற்றும் முருகன் அவர்களது உறவினர்களிடம் தந்தை இறப்பு குறித்து தான் பேச போகிறார்களே தவிர அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றியா பேச போகிறார்கள்? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் நளினி உட்பட 7 பேர் ஆயுள் தண்டனை பெற்று வருகின்றனர். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினியின் தாயார் பத்மா வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் முருகனின் தாய், சகோதரியிடம் முருகனும், நளினியும் பேச அனுமதி கோரி கோரிக்கை வைத்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு, “நளினி மற்றும் முருகன் வெளிநாட்டில் உள்ள அவர்களது உறவினர்களிடம் தந்தை இறப்பு குறித்து தான் பேச போகிறார்களே தவிர அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றியா பேச போகிறார்கள்? எனவும், குடும்பத்தினருடன் காணொளி மூலம் பேச அனுமதிப்பதில் என்ன பாதுகாப்பு குறை?” என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினார்.
அதற்க்கு தமிழக அரசு தரப்பில், “2 பேரையும் பேச அனுமதிப்பதை பன்னோக்கு விசாரணை முகமை விசாரணைக்கு இடையூறாக அமையும்” என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும், வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட பன்முக விசாரணை முகமை தற்போது செயல்பாட்டில் உள்ளதா? என ஆகஸ்ட் 19-ம் தேதிக்குள் விசாரிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…