நாகூரில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து 2 மணிநேரமாக போலீசார் தீவிர விசாரணை!

பயங்கரவாதிகள் 6 பேர் தமிழ்நாட்டில் ஊடுருவியதாக வந்த தகவலின் பேரில், தமிழ்நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்னர். இதில், தமிழகம் முழுவதும் சுமார் 7 ஆயிரம் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நாகூரில், சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர், இவர் பெயர் சையத் அபுதாஹீர். இவர் தனது மாமனார் வீட்டிற்கு நாகூருக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இவரது, செல்போன் சிக்னல் மூலம் இலங்கைக்கு கால் சென்றுள்ளதால், இவரை பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரை நாகப்பட்டினம் தலைமை காவல் நிலையத்தில் வைத்து உயர் அதிகாரிகள் 2 மணிநேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தி வருகின்றனர்.