கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது நாகர்கோவில் நீதிமன்றம்…!
சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்ட கனல் கண்ணனுக்கு நாகர்கோவில் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
கடந்த 10-ஆம் தேதி, சமூக வலைதளத்தில் மதபோதகரின் நடன வீடியோவை வெளியிட்டது தொடர்பான புகாரில் கனல் கண்ணனை நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். சைபர் கிரைம் வழக்கு விசாரணைக்கு நாகர்கோவில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேரில் ஆஜரான போது இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து தற்போது, நாகர்கோவில் நீதிமன்றம் கிறிஸ்தவ மதம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட, திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. நாகர்கோவில் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் தினமும் இருமுறை கையெழுத்திட நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.