நாகர்கோவில் அல்போன்சா ஆலய திருவிழாவை மக்கள் பார்க்க சிறப்பு நேரலை ஏற்பாடு!

Default Image

நாகர்கோவிலில் நடக்கும் புனித அல்போன்சா திருத்தல திருவிழாவின் நிகழ்ச்சிகள் இணையதளம் மற்றும் டிவி வாயிலாக ஒளிபரப்ப சிறப்பு ஏற்பாடு.

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், கடந்த 5 மாதங்களுக்கு மேலாக இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. எந்த ஒரு நிகழ்ச்சியிலும் அதிக கூட்டம் கூட வேண்டாம் எனவும், பல நிகழ்ச்சிகள் வைக்கவே வேண்டாம் எனவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாகர்கோவிலில் ஆயுதப் படை முகாம் சாலையில் உள்ள புனித அல்போன்சா திருத்தலம் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் திருவிழா நடத்துவது வழக்கம்.

கொரோனா வைரஸ் காரணத்தால், இந்த வருடம் மூன்று நாட்கள் மட்டுமே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 25 முதல் 28-ஆம் தேதி வரை இந்த திருவிழா நடக்கிறது. இந்நிலையில் அங்கு நடைபெறக்கூடிய திருப்பலி செபங்கள் ஆகியவற்றை பார்க்க முடியவில்லை என வருந்துவோர்காக டிவி சேனல்கள் மற்றும் இணையதளம் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. www.alphonsachurch.org, www.catholictamiltv.in, www.youtube.com/St.Alphonsa shrine church Nagarcovil, www.youtube.com/ catholictodaytamil MyTv போன்ற இணையதள முகவரியிலும், AMN Tv184 மற்றும் உள்ளுர் டி.வி. சேனல்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மேலும், இதுகுறித்த விவரங்களுக்கு திருத்தல அதிபர் சனில் ஜாண் பந்திசிறைகல்அவர்களின் தொடர்ப்பு எண்  94870 84901 .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Polling - snow
thiruparankundram
Harbhajan Singh about abhishek sharma
Madurai
music director sam cs
seeman udhayanidhi stalin
Dimuth Karunaratne