நாகர்கோவில் மங்களூர் இடையே தினசரி பரசுராம் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவிலில் இருந்து தினமும் காலை 5 மணிக்கு புறப்படும் இந்த ரயில் இரவு 9 மணி அளவில் மங்களூரை அடையும்.இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல் மங்களூருக்கு புறப்பட்டு சென்றது.அன்று மாலை 4.30 மணி அளவில் கோழிக்கோடு அருகே வடகரை-ஐயனிக்காடு என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பயங்கர சத்தம் கேட்டது. மேலும், ரயிலும், நன்றாக குலுங்கவும் செய்தது. இதை கவனித்த இன்ஜின் டிரைவர் அடுத்த ஸ்டேஷன் வந்ததும் அதிகாரிகளிடம் இந்த விவரத்தை கூறினார். தொடர்ந்து அந்த ரயில் மங்களூர் புறப்பட்டு சென்றது. பின்னர் ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அதில், அந்த பகுதியில் தண்டவாளங்களை இணைக்கும் 20க்கும் மேற்பட்ட கிளிப்புகள் அகற்றப்பட்டு இருந்தது. இது தவிர தண்டவாளத்தில் பல இடங்களில் கற்களும் அடுக்கி வைக்கப்பட்ட நிலையில் இருந்தது. பரசுராம் விரைவு ரயிலை கவிழ்ப்பதற்காக யாராவது இந்த சதி செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. இது குறித்து கோழிக்கோடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து போரட்டங்கள் நடந்து வருகிறது. பல இடங்களில் ரயில் மறியல், தண்டவாளங்களை சேதப்படுத்துவது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த நிலையில் கோழிக் கோட்டில் தண்டவாளத்தில் கிளிப்புகள் அகற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் பயின்று ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து…
கஜகஸ்தான்: கஜகஸ்தானில் 72 பயணிகளுடன் சென்ற விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியது. இதில், பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அஜர்பைஜான்…
ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நள்ளிரவில் நடத்திய வான்வழி தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். ஏற்கெனவே…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் பேத்தியும், அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மகளுமான சங்கமித்ரா அன்புமணி ,…
சென்னை: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா இணைந்துள்ள படம் மீது பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது. படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை…
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…