போக்சோ வழக்கு போடப்பட்ட தடகள பயிற்சியாளர்,தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை முயற்சி..!

Default Image

போக்சோ உள்ளிட்ட 5 வழக்குகள் வழக்கு போடப்பட்ட தடகள பயிற்சியாளர் நாகராஜன்,தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

சென்னையில் PSBB மற்றும் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர்கள் மீது பாலியல் புகார் எழுந்தையடுத்து,இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.அதில்,PSBB பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனையடுத்து,பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார்கள் அளிக்கலாம் என்றும்,அவர்களது பெயர், விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்றும்,அதன்படி,புகார் அளிக்க 94447 72222 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு துணை கமிஷனர் ஜெயலட்சுமி கேட்டுக்கொண்ட நிலையில்,மாணவிகள் பலரும் சமூக ஊடகங்களின் மூலம்,தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்த சம்பவங்களை பதிவிட்டு வருகின்றனர்.

அந்தவகையில்,சென்னை பாரிமுனையில் தமிழ்நாடு பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாடமி என்ற பெயரில் விளையாட்டு பயிற்சி மையம் நடத்தி வரும் தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீதும் புகார்கள் அளிக்கப்பட்டன.மேலும்,கடந்த பல ஆண்டுகளாக தன்னை பாலியல் தொந்தரவு செய்ததுடன்,தனது குடும்பத்திற்கும் கொலை மிரட்டல் விடுத்தார் என்று,19 வயது இளம்பெண் ஒருவர் நாகராஜன் மீது சென்னை பூக்கடை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து,தற்போது தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது போக்சோ,கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் மீது பூக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில்,போலீசாரின் விசாரணைக்கு ஆஜராகாத நாகராஜன்,தூக்க மாத்திரைகளை உட்கொண்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து,நாகராஜன் டிஸ்சார்ஜ் ஆனவுடன் உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு,மருத்துவமனையில் போலீசார் முகாமிட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil llive news
thol thirumavalavan about bjp
ponmudi dmk
Lucknow Super Giants have won the toss
sneak her into boys hostel
Premalatha - Vijayakanth
TVKVijay - EPS