Nagapattinam M.P : நாகப்பட்டினம் எம்.பி செல்வராஜ் இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
நாகப்பட்டினம் மக்களவை தொகுதி உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினருமான எம்.செல்வராஜ் இன்று உடல்நல குறைவால் சென்னை மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது நல்லடக்கம் நாளை (மே 14) காலையில் நடைபெற உள்ளது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே சித்தமல்லி பகுதியை சேர்ந்த M.செல்வராஜ், சிறு வயது முதலே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பல்வேறு சிறு சிறு பொறுப்புகளில் சிறப்பாக செயல்பட்டு பின்னர், 1989ஆம் ஆண்டு முதன் முதலாக நாகப்பட்டினம் மக்களவை தொகுதி உறுப்பினராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி கண்டார்.
அதன் பிறகு, 1996, 1998 மற்றும் கடந்த 2019 தேர்தலிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நாகை மக்களவை தொகுதியில் போட்டியிட்டு 4 முறை எம்.பியாக பொறுப்பில் இருந்துள்ளார். இந்த முறை 2024 தேர்தலில் செல்வராஜ் போட்டியிடவில்லை.
ஏற்கனவே, முன்னதாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட செல்வராஜ் அவர்களுக்கு, அண்மையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 2 மணியளவில் உயிரிழந்தார். இவரது நல்லடக்கம் நாளை காலை திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே சுத்தமல்லியில் நாளை காலை 10 மணியளவில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது .
நாகை எம்.பி செல்வராஜ் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். அவரது மறைவு பொதுவுடைமை இயக்கத்துக்கும் டெல்டா மக்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும், நாகை தொகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வருத்தத்தை பதிவிட்டுள்ளார்.
சென்னை : தெற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை…
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகைக்கு தென் கிழக்கே 810 கிமீ தொலைவில்…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…
சென்னை : கனமழை எதிரொலியாக தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்கால்…
சென்னை : டெல்டா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ரெட் அலர்ட் காரணமாக இன்று ஒரு சில மாவட்ட பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…