நாகை இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி செல்வராஜ் மறைவு.! முதல்வர் இரங்கல்.!

CPI M.Selvaraj M.P

Nagapattinam M.P : நாகப்பட்டினம் எம்.பி செல்வராஜ் இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

நாகப்பட்டினம் மக்களவை தொகுதி உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினருமான எம்.செல்வராஜ் இன்று உடல்நல குறைவால் சென்னை மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது நல்லடக்கம் நாளை (மே 14) காலையில் நடைபெற உள்ளது.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே சித்தமல்லி பகுதியை சேர்ந்த M.செல்வராஜ், சிறு வயது முதலே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பல்வேறு சிறு சிறு பொறுப்புகளில் சிறப்பாக செயல்பட்டு பின்னர், 1989ஆம் ஆண்டு முதன் முதலாக நாகப்பட்டினம் மக்களவை தொகுதி உறுப்பினராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி கண்டார்.

அதன் பிறகு, 1996, 1998 மற்றும் கடந்த 2019 தேர்தலிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நாகை மக்களவை தொகுதியில் போட்டியிட்டு 4 முறை எம்.பியாக பொறுப்பில் இருந்துள்ளார். இந்த முறை 2024 தேர்தலில் செல்வராஜ் போட்டியிடவில்லை.

ஏற்கனவே, முன்னதாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட செல்வராஜ் அவர்களுக்கு, அண்மையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 2 மணியளவில் உயிரிழந்தார். இவரது நல்லடக்கம் நாளை  காலை திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே சுத்தமல்லியில் நாளை காலை 10 மணியளவில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது .

முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் :

நாகை எம்.பி செல்வராஜ் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். அவரது மறைவு பொதுவுடைமை இயக்கத்துக்கும் டெல்டா மக்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும், நாகை தொகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வருத்தத்தை பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
jos buttler
ragupathy dmk thiruparankundram
Subman Gill - Abhishek sharma
Australian - Pat Cummins
TVK Leader Vijay - TVK Secretary Anand (Innner)
Meet Akash Bobba