நகை கொள்ளை : நெல்லை அருகே 2 கிலோ நகை கொள்ளை…!!!
நெல்லை கோடீஸ்வரன் நகரை சேர்ந்த மணிகண்டன் என்பவர் நெல்லை டவுன் பகுதியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நகை கடை நடத்தி வருகிறார். இந்த நகை கடை காவல் நிலையத்திற்கு அருகே அமைந்துள்ளது. மணிகண்டன் வழக்கம் போல் அதிகாலை கடையை திறக்க வந்துள்ளார்.
கடையின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்நிலையில் போலீசுக்கு தகவல் அளித்துள்ளார். போலீசார் ஆய்வு செய்ததில் 2 கிலோ தங்க நகை திருட்டு போயிருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து மோப்பநாய் உதவியுடன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.