கீழடியில் நடராஜர் சிலை கண்டெடுத்ததாக வலைதளங்களில் காணொலி ஒன்று உலா வருகின்றன.இது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வு பணிகள் 4 இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வுகல் மணலூர், கொந்தகை அகரம் ஆகிய இடங்களில் பிப்., 19ந்தேதி முதல் தொடர்ந்து அகழாய்வு பணிகள் ஆனது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வு குழிகளில் பானைகள், வடிகால் அமைப்பு, விலங்கின எலும்புகள் என ஏற்கனவேன கண்டுபிடிக்க பட்டன.ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் நடராஜர் சிலை ஆய்வு நடைபெறும் கீழடியில் கண்டெடுக்கப்பட்டதாக வீடியோ ஒன்று வெளியாகி வருகிறது.இது குறித்து தொல்லியல் துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் சமூக வலைதளங்களில் வெளியாகி வருவது போல கீழடியில் நடராஜர் சிலை எதுவும் கண்டெடுக்கப்படவில்லை.இது தொடர்பாக சிலர் தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும் தெரிவித்த அவர் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை பார்வையாளர்கள் யாருக்கும் அனுமதி கிடையது தொல்லியல் துறை நியமித்த பணியாளர்கள் தவிர வேறு யாரும் குழிக்குள் இறங்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.மேலும் அவர் போலியான வீடியோக்களை இது போல் யாரும் பதிவிட வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கா : விமானத்தைத் தவறவிட்ட நபரை மீண்டும் விமானமே அழைத்து சென்ற அதிசிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. லிபியாவைச் சேர்ந்த அமீர்…
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் ஏற்கனவே பேசுபொருளாக இருந்த நிலையில், அதனை இன்னும் பெரிய அளவில்…
சென்னை : தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறு மாநிலங்களவை எம்.பி-க்களின் பதவிக்காலம், வரும் ஜூலையில் நிறைவடைய இருக்கும் நிலையில், அடுத்த தேர்தல்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், பா.ம.க.வில் வெடித்துள்ள உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. ராமதாஸ்…
கர்நாடகா : 'தக் லைஃப்' திரைப்பட நிகழ்ச்சியில் கமலின் கருத்துகள் கடும் எதிர்ப்புகளை பெற்று வருகிறது. அதாவது, சென்னையில் அண்மையில் நடைபெற்ற…
சென்னை : நேற்று காலை ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வடக்கு…