திடீர் நெஞ்சுவலி காரணமாக சசிகலா கணவர் நடராஜன் மருத்துவமனையில் அனுமதி!

Default Image

நெஞ்சுவலி காரணமாக சென்னை பெரும்பாக்கத்திலுள்ள குளோபல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சசிகலாவின் கணவர் நடராஜன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுநீரகம் செயலிழப்பு, கல்லீரல் செயலிழப்பு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சசிகலாவின் கணவர் நடராஜன் சிகிச்சை எடுத்தார். அவருக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. கர்நாடக சிறையில் இருந்து 5 நாட்கள் பரோல் வெளிவந்த சசிகலா, நாள்தோறும் அப்போது மருத்துவமனைக்கு சென்று கணவரை கவனித்துக் கொண்டார். பின்னர் சிசிக்சை முடிந்து நடராஜன் நலமுன் வீடு திரும்பினார்.

இன்று இந்நிலையில் நடராஜனுக்கு திடீரென  நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, உடனடியாக சென்னை குளோபல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நடராஜன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவக்குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்