மக்களவை தேர்தல் : அங்கீகாரம் பெறும் நாம் தமிழர் கட்சி ..!
நாதக: மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று அதற்கான வாக்கு எண்ணிக்கையும் முடிவடைந்துள்ள நிலையில், தமிழக மக்களவை தகுதிகளான 39 தொகுதிகளிலும் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது.
மேலும், நடைபெற்று முடிந்த இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி மொத்தம் 8.19% சதேவீத வாக்குகளை பெற்றுள்ளது. தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெறுவதற்கு ஒரு கட்சிக்கு 8% வாக்குகள் தேவை என்ற நிலையில் தற்போது, 8.19% வாக்குகளை பெற்று நாம் தமிழர் கட்சியானது அங்கீகாரம் பெற்றுள்ளது.
கடந்த 2022-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 6.58% சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது. ஆனால், இந்த முறை 2% சதவீத வாக்குகள் முன்னேறி இருக்கிறது மேலும், 12 மக்களவைத் தொகுதிகளில் 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.