விஜய் அரசியலுக்கு வந்தால், அவர்தான் எனக்கு ஆதரவு தர வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தமிழக அரசியல் களத்திற்குள் நுழைய இலைமறைகாயாக முயற்சி செய்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக மாறிவிட்டது. ஏற்கனவே, தமிழக உள்ளாட்சி தேர்தலில் மறைமுக ஆதரவ அளித்து தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை நிறுத்தி கணிசமான எண்ணிக்கையில் வார்டுகளை கைப்பற்றினார் நடிகர் விஜய்.
அம்பேத்கருக்கு மரியாதை :
அண்மையில் , ஏப்ரல் 14ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் நிர்வாகிகளை அழைத்து மாவட்டந்தோறும் , அம்பேத்கர் சிலைக்கு மக்கள் இயக்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என விஜய் கூறியதன் பெயரில், மக்கள் இயக்க நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
விஜய் ஆதரவு :
விஜயின் இந்த அரசியல் நகர்வு குறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானிடம் இன்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இது பற்றி அவர் கூறுகையில், விஜய் அரசியலுக்கு வர முயற்சி செய்கிறார். அதனை நான் வரவேற்கிறேன். அரசியலுக்கு விஜய் வந்தால் அவரை நான் ஆதரிக்க தேவையில்லை. அவர் தான் என்னை ஆதரிக்க வேண்டும் என கூறினார்.
வலிமை :
மேலும், தற்போது நான் மட்டுமே இருக்கிறேன். விஜய் அரசியலுக்கு வந்தால் அது வலிமையாக இருக்கும் என சென்னையில் சிவந்தி ஆதித்தனாரின் சிலைக்கு மரியாதை செலுத்திய பின் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் செய்தியாளர்களிடம் கூறினார்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
சென்னை : கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…
சென்னை : சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை என்கிற…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “நீட் தேர்வை…
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், நேற்று ஐந்தாவது நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…