நாகையில் சீரமைப்பு பணிக்காக திருச்சியிலிருந்து 200 பேர் பயணம்….!!!
கஜா புயலால் உருக்குலைந்த நாகை மாவட்டத்தின் சீரமைப்பு பணிக்காக திருச்சியிலிருந்து 200 பேர் சென்றுள்ளனர்.
காஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தின் சீரமைப்பு பணியில் பலர் ஈடுபட்டுள்ளனர். அந்த மாவட்டத்தில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல இடங்களில் இருந்து ஊழியர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் இருந்து 200 ஊழியர்கள் அரசு பேருந்தில், அவர்களுக்கு தேவையான உபகரணங்களுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.