நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விதிமுறைகள் வெளியீடு!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களுக்கான வைப்பு தொகை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
தமிழகத்தில் மொத்தம் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், 8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறவுள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விதிமுறைகள் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களுக்கான வைப்பு தொகை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. மாநகராட்சி உறுப்பினர் பதவிக்கு ரூ.4,000, நகராட்சி உறுப்பினர் பதவிக்கு ரூ.2,000 காப்புத்தொகை கட்ட வேண்டும். பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிட ரூ.1,000 காப்புத்தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பட்டியலினத்தவர், பழங்குடியினர் காப்புத்தொகையில் பாதி செலுத்தினால் போதுமானது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விதிமுறைகள்:
- வாக்குச்சாவடிகள், வாக்கு எண்ணும் மையங்களில் செல்போன் பயன்படுத்த தடை.
- காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே ஒலிப்பெருக்கிகளுக்கு அனுமதி.
- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்/கட்சி பெயரில் சுவரொட்டி ஒட்ட தடை.