என்.எல்.சி. விவகாரம் – தமிழ்நாடு அரசு இன்று ஆலோசனை!
என்.எல்.சி நில எடுப்பு விவகாரம் தொடர்பாக இன்று மாலை அமைச்சர்கள் மட்டத்திலான ஆலோசனை.
என்.எல்.சி நில எடுப்பு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு இன்று மாலை ஆலோசனை நடத்துகிறது. என்.எல்.சி நில எடுப்பு விவகாரம் தொடர்பாக இன்று மாலை 5 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடைபெறுகிறது. இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் கணேசன், எம்ஆர்கே பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, 3 எம்ஏக்கள் மற்றும் என்.எல்.சி பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். சுரங்க விவகாரத்துக்காக என்.எல்.சி நிர்வாகம் நிலம் எடுக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழக அரசு ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.