#NivarUpdate: கரையை கடந்த “நிவர்” தத்தளிக்கும் சென்னை புறநகர்.!

சென்னை தாம்பரம் சுற்றுவட்டாரத்தில் பெய்த கனமழையால் 10,000க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
வங்கக்கடலில் உருவான நிவர் புயல், அதிதீவிர புயலாக கரையை கடந்து அதன்பின் தீவிர புயலாக வலுவிழந்து, புதுச்சேரியில் இரவு 2.30 மணியளவில் முழுமையாக கரையை கடந்தது.
இதனையடுத்து, புயல் கரையை கடந்த பிறகு பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன், இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்ததாகவும், செல்போன் கோபுரங்கள் சரிந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
அந்த வகையில், சென்னை தாம்பரம் சுற்றுவட்டாரத்தில் பெய்த கனமழையால் 10,000க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அந்த வீட்டில் வசித்து வரும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும், 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தை போல் தற்போது பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், நிவர் புயல் கரையை கடந்தாலும் சென்னையில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சேனை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025