அமைச்சர் துரைக்கண்ணுவின் மரணத்தில் மர்மம்! – மு.க.ஸ்டாலின்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் போலவே, அமைச்சர் துரைகண்ணு மரணத்திலும் மர்மம் உள்ளது.
மறைந்த வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில், இவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு ஏற்கனவே, இதயநோய், நீரிழிவு நோய் போன்ற பிரச்சனைகள் இருந்த நிலையில், கடந்த 31-ம் தேதி இரவு சிகிச்சை பலனின்றி காலமானார்.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ட்வீட்டர் பக்கத்தில் துரைக்கண்ணுவின் மரணம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் போலவே, அமைச்சர் துரைகண்ணு மரணத்திலும் மர்மம் உள்ளது. கோடிக்கணக்கான ஊழல் பணத்தை அவரிடம் வைத்திருந்த அதிமுகவினர் துறைபோக்கன்னு உடலை வைத்து ஊழல்-மிரட்டல் என நாடகம் ஆடி இருக்கிறார்கள்.’ என பதிவிட்டுள்ளார்.