சம்மட்டி மற்றும் இரும்பு கம்பிகளால் சிலைகளை அடித்து உடைத்த மர்ம கும்பல்..!

Published by
murugan

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தொப்பபாளையத்தில் காளியண்ணன் கோவில் உள்ளது.இங்கு காளியண்ணன், விளைய காளியண்ணன் என்ற இரண்டு சிலைகள் 6 அடி உயரத்தில் உள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு கதவை உடைத்து உள்ளே  மர்ம கும்பல் புகுந்தனர். அவர்கள் அனைவரும் முகம் தெரியாதவாறு தங்கள் முகத்தை துணியால் மூடி இருந்தன. உள்ளே சென்ற அவர்கள்  காளியண்ணன், விளைய காளியண்ணன் ஆகிய இரண்டு சிலைகள் அடித்து நொறுக்கினர்.
அந்த  இரண்டு சிலைகளையும் சம்மட்டி மற்றும் இரும்பு கம்பியால் அடித்து உடைத்தனர். இதனால் இந்த சிலைகளின் கை , கால்கள் துண்டானது.சிலைகளை  அடித்து உடைத்து விட்டு அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
அவர்கள் சிலைகளை உடைக்கும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் அங்கு எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அந்த மர்ம நபர்கள் முகம்மூடி அணிந்து இருந்ததால் அவர்களின் உடல் அங்கங்களை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில் சிலைகளை உடைத்த சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

Published by
murugan

Recent Posts

“யார்டா நீங்கெல்லாம்.?” இந்திய ராணுவத்திற்கு நன்கொடையா? பதறிய பாதுகாப்புத்துறை!

“யார்டா நீங்கெல்லாம்.?” இந்திய ராணுவத்திற்கு நன்கொடையா? பதறிய பாதுகாப்புத்துறை!

டெல்லி : இணையத்தில் அவ்வப்போது போலி செய்திகள் அந்தந்த சூழலுக்கு ஏற்ப பலரை  நம்ப வைக்கும்படி போலி செய்திகள் உலா…

18 minutes ago

GT vs RR: யாருக்கு கிடைக்கும் ஹாட்ரிக்? இன்று ராஜஸ்தான் – குஜராத் அணிகள் பலப்பரீட்சை.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் - குஜராத் அணிகள் மோதுகின்றனர். ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடைபெறும்…

37 minutes ago

Live : இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., பத்ம விருதுகள் வழங்கும் விழா வரை.!

சென்னை : நேற்றைய விடுமுறை தினத்தை தொடர்ந்து இன்று காலை அவை தொடங்கியதும், கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பது குறித்த சட்ட…

1 hour ago

பத்மபூஷன் விருதை பெற குடும்பத்துடன் டெல்லி புறப்பட்ட அஜித்குமார்.!

டெல்லி : 2025ம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகளை இன்று மாலை வழங்குகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.  டெல்லியில் உள்ள…

2 hours ago

ஈரான் வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40ஆக உயர்வு.!

தெஹ்ரான்: ஈரானின் தெற்கு மாகாணமான ஹோர்மோஸ்கானில் உள்ள துறைமுகத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40…

2 hours ago

இது எங்க கோட்டை.! ‘விராட் 50, க்ருனால் 50 அடித்து அசத்தல்’.! ஆர்சிபி அபார வெற்றி..!!

டெல்லி : நடப்பு ஐபிஎல் தொடரில் நெற்றிரவு நடைபெற்ற போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இதற்கான டாஸில்…

3 hours ago