சம்மட்டி மற்றும் இரும்பு கம்பிகளால் சிலைகளை அடித்து உடைத்த மர்ம கும்பல்..!
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தொப்பபாளையத்தில் காளியண்ணன் கோவில் உள்ளது.இங்கு காளியண்ணன், விளைய காளியண்ணன் என்ற இரண்டு சிலைகள் 6 அடி உயரத்தில் உள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு கதவை உடைத்து உள்ளே மர்ம கும்பல் புகுந்தனர். அவர்கள் அனைவரும் முகம் தெரியாதவாறு தங்கள் முகத்தை துணியால் மூடி இருந்தன. உள்ளே சென்ற அவர்கள் காளியண்ணன், விளைய காளியண்ணன் ஆகிய இரண்டு சிலைகள் அடித்து நொறுக்கினர்.
அந்த இரண்டு சிலைகளையும் சம்மட்டி மற்றும் இரும்பு கம்பியால் அடித்து உடைத்தனர். இதனால் இந்த சிலைகளின் கை , கால்கள் துண்டானது.சிலைகளை அடித்து உடைத்து விட்டு அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
அவர்கள் சிலைகளை உடைக்கும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் அங்கு எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அந்த மர்ம நபர்கள் முகம்மூடி அணிந்து இருந்ததால் அவர்களின் உடல் அங்கங்களை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில் சிலைகளை உடைத்த சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.