அதிமுக மாணவரணி துணை செயலாளர் மர்மமான முறையில் எரிக்கப்பட்ட நிலையில் மரணம்!
தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி அருகே இருக்கும் ரெங்கநாதபுரத்தை சேர்ந்தவர் பாண்டித்துரை ஆவார் .இவரது மகன் சதீஷ் .இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார்.
மேலும் ஆண்டிபட்டி அதிமுக மாணவரணி ஒன்றிய துணைச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்துள்ளார்.இந்நிலையில் இன்று காலை மர்மமான முறையில் சதீஷ் எரிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதன் காரணாமாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்த்துறையினர் சதீஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
மேலும் நடந்தது கொலையாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.மேலும் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்து வருகின்றன.
மேலும் காவத்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.