கல்யாண பெண்ணை காரில் கடத்தி சென்ற மர்ம கும்பல்.
மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூர் அருகே ஊர்சேரி எனும் பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவரின் மகள்தான் சங்கீதா. தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீஷியன் வேலை செய்து வரும் இவர் நேற்று முன்தினம் இரவு பணியை முடித்துவிட்டு தன் சகோதரனுடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது திடீரென காரில் வந்த மர்ம நபர்கள் சங்கீதாவின் சகோதரரை அடித்துவிட்டு சங்கீதாவை தூக்கி சென்றுள்ளனர். இதுகுறித்து சங்கீதாவின் சகோதரர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் கடத்தல் கும்பல் யார் என்பது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். முப்பதாம் தேதி சங்கீதாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் திருமணம் நடைபெற இருந்துள்ளது. இந்நிலையில் சங்கீதாவை மர்ம நபர்கள் கடத்தி உள்ளது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…