தந்தை மற்றும் மகனை வெட்டி கொன்ற மர்ம கும்பல்!

கரூர் மாவட்டத்தில் குளித்தலை அருகே உள்ள முதலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லதம்பி ஆவார்.இவர் விவசாய தொழில் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் இவர் தனது தோட்டத்தில் இருந்து பூக்களை பறித்துவிட்டு அதை ஸ்ரீரங்கம் சந்தையில் விற்பனை செய்துவிட்டு தனது இரு சக்கர வாகனத்தில் திரும்பி வந்துள்ளார்.
அப்போது அவர் கீலமேடு பகுதியில் வந்துகொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளது.
இதன் காரணமாக நல்லதம்பி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.அவரை கொன்றது மட்டும் இல்லாமல் அவரின் தந்தையை தேடிவந்துள்ளனர்.
அப்போது பேரக்குழந்தையை பள்ளி வேனில் ஏற்றிவிட நின்ற நல்லதம்பியின் தந்தை வீரமலையையும் அந்த கும்பல் சாரமாக தாக்கியுள்ளது.இதன் காரணமாக அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த கொலை சம்பவம் காரணமாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.அப்போது நிலத்தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளது என்று தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவருகின்றன.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் முதல்.., அமெரிக்கா – உக்ரைன் அரசியல் நிலவரம் வரை…
March 5, 2025
ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!
March 5, 2025
SA vs NZ : தென்னாப்பிரிக்காவை கதறவிட்ட வில்லியம்சன் – ரச்சின்! நியூசிலாந்து வைத்த இமாலய இலக்கு.!
March 5, 2025