மர்ம நோய்: தமிழகத்தில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.!
மர்ம நோய் தமிழகத்தில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் எலுரு நகரில், குழந்தைகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம், தலைவலி ஏற்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெரும்பாலான நோயாளிகள் சில மணி நேரங்களில் குணமடைந்து வீடு திரும்பி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்து வயதினரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்ம் தெரிவிக்கப்பட்டது.
இந்த நோய்க்கான காரணம் கண்டறியப்படவில்லை. இந்நிலையில், மர்ம நோய் தமிழகத்தில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா குறித்து பயப்பட வேண்டாம் என்றும் அதே சமயம் அலட்சியம் வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.