குலசேகரன்பட்டினத்தில் சிறிய ஏவுகணைகளை அனுப்ப முடியும்.! மயில்சாமி அண்ணாதுரை நம்பிக்கை.!
வானில் செயற்கைகோளில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், உடனடியாக சரி செய்து கொள்ள ஏவுகணை அனுப்ப பட வேண்டும். அதற்கு சரியான இடம் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் – மயில்சாமி அண்ணாதுரை பேச்சு.
நேற்று சேலம் மாவட்டம் ஆத்தூரில் கல்வி நிறுவனங்களின் நிகழ்ச்சியில் பங்கேற்ற விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, குலசேகரத்தில் அமைக்கப்பட்டு வரும் ராக்கெட் ஏவுதளத்தை பற்றி குறிப்பிட்டு பேசினார்.
தூத்துகுக்டி மாவட்டம் உடன்குடி அருகே, குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பேசுகையில், ‘ வானில் செயற்கைகோளில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், அதனை சரி செய்ய உடனடியாக இன்னோர் செயற்கைகோள் அனுப்பப்பட வேண்டும்.
அதற்கு தற்போது சரியான தளமாக குலசேகரன்பட்டினம் அமைந்து வருகிறது. இதன் மூலம் சிறிய ரக ஏவுகணைகளை அனுப்பமுடியும். இதற்காக இஸ்ரோ திட்டமிட்டு வருகிறது.
அப்படியான ஒரு சிக்கனமான திட்டம் வருகையில் கானை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் . என குறிப்பிட்டு விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.