மயிலாப்பூர் : கபாலீஸ்வரர் கோவில் முன் தீ வைத்த இளைஞர் கைது ..!
கடந்த வாரம் செவ்வாய்கிழமை அன்று சென்னையில் உள்ள மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ராஜகோபுரம் நுழைவு வாயில் முன்பு மர்ம நபர் ஒருவர் மது போதையில் சில பொருட்களை குவித்து அதை பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இது தொடர்பாக கோயில் நிர்வாகம் சார்பில் மயிலாப்பூர் காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.
ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை..!
மர்ப நபர் வைத்த தீ அதிஷ்டவசமாக கோவிலின் கதவுக்கு எதுவும் சேதம் ஆகாமல் இருந்தது. இந்நிலையில் அவரை தீ வைத்த அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியும் வந்தது. புகாரின் பேரில் மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். கோவிலின் வாசலின் உள்ள சிசிடிவி பழுதாகி இருந்ததால் அருகில் இருந்த சில சிசிடிவி உதவிகளோடு கிடைத்த காட்சிகளை வைத்துதான் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
பொது இடத்தை சேதம் செய்தது, மனித உயிர்க்கு ஆபத்து விளைவிக்க தூண்டியது போன்ற 2 குற்றங்களின் கீழ் வழக்கு பதிவு செய்து அந்த மர்ப நபரை தேடி வந்தனர். இதற்காக போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர் என்று கூறிகிறார்கள். இந்நிலையில், சென்னையில் உள்ள பாரிமுனையில் கோவில் வாசலில் தீ வைத்த குற்றத்திற்காக தீனதயாளன் எனும் இளைஞனை போலீசார் இன்று கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.