என் தங்கை இறப்பு, அடுத்த பாதிப்பு அனிதா மரணம் – த.வெ.க தலைவர் விஜய்!
அனிதா தகுதி இருந்தும் நீட் தேர்வால் உயிரிழந்த போது தன்னுடைய மனதில் பெரிய தாக்கம் ஏற்பட்டதாக த.வெ.க மாநாட்டில் அக்கட்சி தலைவர் விஜய் பேசியிருக்கிறார்.
விழுப்புரம் : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பிரமாண்ட மாநாடு தமிழ்நாட்டையே திரும்பி பார்க்கும் அளவுக்கு விக்ரவாண்டி வி.சாலையில் படு பிரமாண்டமாக நடைபெற்றது, மொத்தமாக, மாநாட்டிற்கு சுமார் 13 லட்சத்தி 80 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், மாநாட்டில் கலந்துகொண்ட கட்சித் தலைவர் விஜய் தன்னுடைய தொண்டர்களுக்குக் குட்டி கதை முதல் கட்சியின் கொள்கைகள் என பல விஷயங்களைப் பற்றியும் பேசினார். அதில் மிகவும் முக்கியமாக தன்னுடைய தங்கை இறப்பு தனக்கு எவ்வளவு பாதித்தது? என்பது பற்றியும், நீட் தேர்வில் உயிரிழந்த அனிதா இறப்பு எந்த அளவுக்கு பாதித்தது என்பது குறித்தும் பேசினார்.
இது குறித்துப் பேசிய அவர் ” என்னுடைய தங்கை திவ்யா இறந்தபோது எனக்குச் சின்ன வயதில் ஏற்பட்ட அந்த தாக்கம் ரொம்பவே பெரிது. அப்போது எனக்கு எந்த அளவுக்கு வேதனை ஏற்பட்டதோ அதே அளவுக்கு மாறாமல் அதே வேதனை என் தங்கை அனிதா இறப்பு ஏற்படுத்தியது. அதிலும், தகுதி இருந்தும் தடையாக இருந்த இந்த நீட். அப்போது தான் ஒரு முடிவெடு செய்தேன்.
என்னை வாய் நிறைய விஜய் அண்ணா…விஜய் அண்ணா என அழைக்கும் இந்த பெண் பிள்ளைகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று. அவர்களுக்கு நிரந்தரமாக ஒரு பாதுகாப்பை ஏற்பாடு செய்யவேண்டும் என முடிவு செய்தேன். இனிமேல் கவலைப் படாதீர்கள் உங்கள் மகன்…உங்கள் அண்ணன்..உங்கள் தம்பி…உங்கள் விஜய் களத்திற்கு வந்துவிட்டேன்” எனவும் பேசினார்.