என் அருமை நண்பர் மீண்டும் முழு உற்சாகத்துடன் செயல்பட வேண்டும் -மு.க.ஸ்டாலின்
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக நேற்று செய்திகள் வெளியாகியது.இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விஜயகாந்த் நலம் பெற ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அதில், தே.மு.தி.க. தலைவரும் அருமை நண்பருமானஅவர்கள் உடல்நலக் குறைவினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்தேன். அவர் விரைவில் முழுநலம் பெற்று பொதுப்பணியில் மீண்டும் முழு உற்சாகத்துடன் செயல்பட வேண்டும் என்ற எனது பெருவிருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
விஜகாந்துக்கு கொரோனா தொற்று இருப்பது குறித்து செய்திகள் வெளியானதை தொடர்ந்து தேமுதிக தலைமை கழகம் சார்பில் விஜயகாந்த் உடல்நிலை குறித்து ட்விட்டரில் அறிக்கை வெளியானது.அதில் , ஆறு மாதத்திற்கு ஒரு முறை வழக்கமாக மருத்துவ பரிசோதனை செய்வது போல தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அதில் லேசான கொரோனா அறிகுறி தென்பட்டது எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் உடனடியாக அது சரி செய்யப்பட்டு விட்டதாகவும், தற்போது பூரண சுகமடைந்து நலமாக உள்ளார் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தே.மு.தி.க. தலைவரும் அருமை நண்பருமான @iVijayakant அவர்கள் உடல்நலக் குறைவினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்தேன்.
அவர் விரைவில் முழுநலம் பெற்று பொதுப்பணியில் மீண்டும் முழு உற்சாகத்துடன் செயல்பட வேண்டும் என்ற எனது பெருவிருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
— M.K.Stalin (@mkstalin) September 24, 2020